மெல்பேர்னில் அறிவிக்கப்பட்டுள்ள 15 பில்லியன் டொலர் செலவிலான ரயில் சீரமைப்புத்திட்டத்தின் கீழ் மெல்பேர்ன் நகரிலிருந்து மெல்பேர்ன் விமானநிலையத்துக்கான பயண நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே என்று கட்டுமான பணிக்கு பொறுப்பானவர்களை மேற்கொள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஆரம்பிக்கவுள்ள விமானநிலையத்துக்கான ரயில்வே கட்டுமான பணிகள் முற்றிலும் நவீனமயமாகவுள்ளதாகவும் மெல்பேர்ன் நகரத்தில் Southern Cross ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பிக்கும் இந்த ரயில் சேவை Sunshine வழியாக Tullamarine விமானநிலையத்தை சென்றடையும் வண்ணம் அமைக்கப்படப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரத்தில் ஏழு நாட்களும் 24 மணிநேரம் செயற்படவுள்ள இந்த ரயில் சேவைக்கான பயணக்கட்டம் போய் - வர 20 டொலர்கள் என்று தற்போதைக்கு தீர்மானிக்கப்ட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
27 கிலோமீற்றர் நீளத்திற்கு இந்த ரயில்வே கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
