SKIP TO MAIN CONTENT

மெல்பேர்ன் கப்: Twilight Payment வெற்றிவாகை சூடியது!

Twilight Payment
Source: Horsebetting

1 min read

Published

Updated


Skip to article content

ஆஸ்திரேலியாவையே ஒரு நிமிடம் ஸ்தம்பிக்க வைக்கும் போட்டி என வர்ணிக்கப்படும், மெல்பேர்ன் கப் குதிரைப்பந்தயப் போட்டியில் Irish குதிரையான Twilight Payment வெற்றி பெற்றது.

Twilight Payment-இன் வெற்றியானது மிகுந்த மகிழ்ச்சி தருவதாக இக்குதிரையை ஓட்டிச்சென்ற  Jye McNeil  தெரிவித்தார்.

அதேநேரம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை என குதிரையின் பயிற்றுவிப்பாளர் Joseph O’Brien குறிப்பிட்டார்.

இரண்டாம் இடத்தை  Tiger Moth பெற்றுக்கொண்ட அதேநேரம் Prince of Arran என்ற குதிரை மூன்றாம் இடத்தைப் பிடித்தது.

இவ்வருட மெல்பேர்ன் கப்புக்கான வெற்றித்தொகை சுமார் 8 மில்லியன் டொலர்கள் ஆகும். 

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் காரணமாக இம்முறை மெல்பேர்ன் கப் போட்டி நடைபெறும் திடலுக்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்படத்தக்கது.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now