SKIP TO MAIN CONTENT

மெல்பேர்ன் Holiday Inn கோவிட் பரவல்: தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை பத்தாக அதிகரிப்பு!

Cleaners are seen wearing full PPE while working at the Holiday Inn hotel on 10 February, 2021 in Melbourne, Australia.
Cleaners are seen wearing full PPE while working at the Holiday Inn hotel on 10 February, 2021 in Melbourne, Australia. Source: Getty Images

4 min read

Published

Updated


Skip to article content

விக்டோரிய மாநிலத்தின் தனிமைப்படுத்தல் மையங்களில் ஒன்றான Melbourne Airport  Holiday Inn  ஹோட்டலில் ஏற்பட்டுள்ள கோவிட் பரவல் மூலம் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளது.

இன்றையதினம் மேலும் இருவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவர்கள் இருவரும் ஏற்கனவே தொற்று இனங்காணப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டிலிருந்துவந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தலை முடித்துக்கொண்டு வெளியேறிய இருவர் ஹோட்டலில் பணிபுரியும் மூவர் மற்றும் தனிமைப்படுத்தலிலிருந்த மூவரடங்கிய குடும்பம் என 8 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த பின்னணியில் தற்போது இந்த எண்ணிக்கை பத்தாக உயர்வடைந்துள்ளது.

குறித்த ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் திரவநிலையிலுள்ள மருந்தை நீர்த்துளிகளாக்கி மூக்கில் செலுத்த உதவும் Nebuliser என்ற கருவியைப் பயன்படுத்தியதன் காரணமாக கொரோனா வைரஸ் பரவியிருக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கோவிட் பரவல் எவ்வாறு ஏற்பட்டது என்பதை கண்டறியும் நோக்கிலும் சுத்தப்படுத்தல் பணிகளுக்காகவும் Holiday Inn ஹோட்டல் நேற்றையதினம் மூடப்பட்டது.

இதுஒருபுறமிருக்க கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட சிலர் சென்றுவந்த இடங்கள் தொடர்பிலான விவரங்களை வெளியிட்டுள்ள விக்டோரிய சுகாதாரத் திணைக்களம் அந்த இடங்களுக்குச் சென்றவர்களை உடனடியாக 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும் கோவிட் சோதனையை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

அந்த விவரங்கள் பின்வருமாறு:

LocationSiteExposure period
BrightonNorth Point Cafe2B North RdBrighton, VIC 31868:10am — 9:30am31/1/2021
Brandon ParkKmart, Brandon Park Shopping CentreCnr Springvale Rd and Ferntree Gully RdBrandon Park, VIC 31704:35pm — 5:10pm31/1/2021
Clayton SouthNakama Workshop85 Main RdClayton South, VIC 316911:15am — 12:00pm1/2/2021
Glen WaverleyCommonwealth Bank, 28-32 Kingsway, Glen Waverley1:30pm —2:45pm9/2/2021
Glen WaverleyHSBC Bank, 38 Kingsway, Glen Waverley2:15pm — 3:30pm9/2/2021
HeathertonMelbourne Golf Academy385 Centre Dandenong RdHeatherton, VIC 32025:19pm — 6:35pm1/2/2021
KeysboroughAces Sporting Club (Driving Range)Cnr Springvale Rd and Hutton RdKeysborough, VIC 317310:00pm — 11:15pm30/1/2021
KeysboroughKmart, Parkmore Keysborough Shopping CentreC/317 Cheltenham RdKeysborough, VIC 31734:00pm — 5:00pm31/1/2021
MaidstoneMarciano's Cakes126 Mitchell StMaidstone VIC 30129:45am — 10:25am5/2/2021
MelbourneExford Hotel199 Russell StMelbourne, VIC 300011:00pm — 11:35pm29/1/2021
Moorabbin AirportLululemon, DFO MoorabbinShop G-039/250 Centre Dandenong RdMoorabbin VIC 31945:00pm — 5:45pm1/2/2021
Noble ParkClub Noble46/56 Moodemere StNoble Park VIC 31742:36pm — 3:30pm30/01/2021
SpringvaleBunnings Springvale849 Princes HwySpringvale, VIC 317111:30am — 12:15pm1/2/2021
SpringvaleColes Springvale825 Dandenong RdSpringvale, VIC 31715:00pm — 6:00pm31/1/2021
SpringvaleSharetea Springvale27C Buckingham AveSpringvale, VIC 31716:50pm — 7:30pm1/2/2021
SpringvaleWoolworths Springvale302 Springvale RdSpringvale, VIC 31716:30pm — 7:30pm1/2/2021
SunburyCellarbrations34 Batman AvenueSunbury VIC 34295:44pm — 6:19pm7/2/2021
SunburyCellarbrations34 Batman AvenueSunbury VIC 34296:17pm — 7:02pm6/2/2021
SunburySunny Life Massage - Sunbury Square Shopping Centre2-28 Evans StreetSunbury VIC 34294:30pm — 6:30pm6/2/2021
SunburyPJ's Pet WarehouseShop 2, 104 Horne StreetSunbury VIC 34293:37pm — 4:10pm5/2/2021
SunburyBakers Delight - Sunbury Square Shopping Centre2-28 Evans StreetSunbury VIC 34293:40pm — 4:15pm5/2/2021
SunburyAldente Deli - Sunbury Square Shopping Centre2-28 Evans StreetSunbury VIC 34293:45pm — 4:23pm5/2/2021
SunburySushi Sushi - Sunbury Square Shopping Centre2-28 Evans StreetSunbury VIC 34293:53pm — 4:28pm5/2/2021
SunburyAsian Star - Sunbury Square Shopping Centre2-28 Evans StreetSunbury VIC 34293:57pm — 4:30pm5/2/2021
SunshineDan Murphy's47 McIntyre RdSunshine VIC 30205:50pm — 6:30pm5/2/2021
SunshineDan Murphy's47 McIntyre RdSunshine VIC 30206:50pm — 7:30pm6/2/2021
Taylors LakesOff Ya Tree Watergardens399 Melton HighwayTaylors Lakes VIC 30381:00pm — 1:52pm6/2/2021
West MelbourneKebab Kingz438 Spencer StWest Melbourne, VIC 300311:24pm — 12:15am29/1/2021

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல்தொண்டை நோவுஇருமல்உடற்சோர்வுசுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

 

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now