SKIP TO MAIN CONTENT

மக்கள் தொகை வேகமாக அதிகரித்துவரும் ஆஸ்திரேலிய நகரம் எது தெரியுமா?

Scenic Melbourne skyline
Number of people living in Australia's capital cities has grown almost three million in 10 years. (AAP) Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

ஆஸ்திரேலியாவின் அனைத்து நகரங்களுடனும் ஒப்பிடும்போது மெல்பேர்னிலேயே சனத்தொகைப் பெருக்கம் அதிகளவில் நடைபெறுவதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த 12 மாதங்களில் மெல்பேர்னின் மக்கள் தொகை ஒரு லட்சத்தி 25 ஆயிரத்தால் அதிகரித்து, தற்போது 4.9 மில்லியனை எட்டியுள்ளது.

சிட்னியின் மக்கள் தொகை, கடந்த 12 மாதங்களில், ஒரு லட்சத்தால் அதிகரித்து 5.1 மில்லியன் ஆகியுள்ள அதேநேரம், டார்வின், அடிலெய்ட் மற்றும் பேர்த்தில் ஒரு சதவீதம் அல்லது அதற்கும் குறைவானளவே சனத்தெகை அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் சனத்தொகைப் பெருக்கத்தில், மெல்பேர்ன், சிட்னி மற்றும் பிரிஸ்பேர்ன் ஆகிய நகரங்கள் சுமார் 70 வீதம் பங்குவகித்துள்ளன.

தற்போது ஆஸ்திரேலியாவின் மொத்த சனத்தொகை 24.6 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now