மெல்பேர்னில் கொரோனா தொற்றுக்கால கட்டுப்பாடுகள் இறுக்கமாக பேணப்பட்டுவரும் நிலையில், Werribee பிரதேசத்திலிருந்து மெல்பேர்ன் நகருக்கு Butter Chicken கறி வாங்குவதற்காக வந்தவருக்கு பொலீஸார் 1652 டொலர்கள் அபராதம் விதித்துள்ளனர்.
வேலை, பாடசாலை, அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு காரணங்களுக்காக வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்றும் வசிப்பிடத்தை அண்டிய பிரதேசங்களைவிட வேறு இடங்களுக்கு பயணம் செய்யவேண்டாம் என்றும் மெல்பேர்னில் இறுக்கமான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்ற வேளையில், குறிப்பிட்டநபர் Butter Chicken வாங்குவதற்காக - தனது வதிவிடத்திலிருந்து 32km பயணம் செய்தமைக்காக பொலீஸார் இந்த அபராதத்தை விதித்துள்ளனர்.
பொதுஇடங்களில் மற்றும் தனிப்பட்ட இடங்களில் கூட்டம் கூடியது உட்பட கட்டுப்பாடுகளை மீறியதற்காக பலருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலீஸார் கொரோனா தொடர்பில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அனைவரும் சரியானமுறையில் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளனர்.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
