மெல்பேர்னில் மற்றுமொரு ஹோட்டல் பணியாளருக்கு கோவிட் தொற்று உறுதி!

Medical staff work at a COVID-19 pop-up testing centre in South Melbourne

Medical staff work at a COVID-19 pop-up testing centre in South Melbourne Source: AAP

மெல்பேர்னில் மற்றுமொரு ஹோட்டல் பணியாளருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பயணிகள் தனிமைப்படுத்தப்படும் Melbourne Airport-Holiday Inn ஹோட்டலில் பணிபுரிந்த பெண் ஒருவருக்கே கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே Grand Hyatt ஹோட்டலில் பணிபுரிந்த 26 வயது நபருக்கு கடந்த வாரம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தநிலையில் தற்போது  Holiday Inn ஹோட்டலில் பணிபுரிந்தவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

குறித்த பணியாளருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் கோவிட் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதுஒருபுறமிருக்க கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்படமுன் குறித்த பெண் சென்றுவந்த இடங்கள் தொடர்பிலான விவரங்களை வெளியிட்டுள்ள விக்டோரிய சுகாதாரத் திணைக்களம், அந்த இடங்களுக்குச் சென்றவர்களை உடனடியாக 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும் கோவிட் சோதனையை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

அந்த விவரங்கள் பின்வருமாறு:

Maidstone Marciano's Cakes,126 Mitchell St, Maidstone VIC 3012: 5/2/2021 -09:45-10:25am

Dan Murphy's, 47 McIntyre Rd, Sunshine VIC 3020: 5/2/2021- 17:50-18:30pm & 6/2/2021- 18:50-19:30pm

Off Ya Tree Watergardens, 399 Melton Highway,Taylors Lakes VIC 3038: 6/2/2021- 13:17-13:52pm

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல்தொண்டை நோவுஇருமல்உடற்சோர்வுசுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


2 min read

Published

Updated


Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now