உலகில் வாழ்வதற்கு மிகவும் உகந்த நகரங்களின் பட்டியலில் முதலிடத்தை ஆஸ்திரியாவின் வியன்னாவும், இரண்டாம் இடத்தை டென்மார்க்கின் Copenhagen-உம், மூன்றாமிடத்தை சுவிட்சர்லாந்தின் Zurich நகரமும் பிடித்துள்ளன.
தொடர்ந்து பல ஆண்டுகள் முன்னிலையில் இருந்த ஆஸ்திரேலியாவின் நகரங்கள் அனைத்தும் இம்முறை பின்தள்ளப்பட்டுள்ளன.
இதன்படி மெல்பன் பத்தாவது இடத்திற்கும், பெர்த் நகரம் 32வது இடத்திற்கும், பிரிஸ்பேன் நகரம் 27வது இடத்திற்கும், அடிலைட் நகரம் 30வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளன.
2021 ஆம் ஆண்டு பட்டியலில் மெல்பன் 8வது இடத்திலும், பெர்த் 6வது இடத்திலும், அடிலைட் 3வது இடத்திலும் , பிரிஸ்பேன் 10வது இடத்திலும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
2021ம் ஆண்டு 11வது இடத்திலிருந்த சிட்னி 13வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
இப்புதிய பட்டியலில் நான்காவது இடத்தில் Calgary நகரமும் ஐந்தாவது Vancouver நகரமும் இடம்பெற்றுள்ளன.
உலகில் வாழ்வதற்கு மிகவும் உகந்த நகரங்களின் பட்டியலில் தொடர்ந்து 7 ஆண்டுகள் முதலிடத்தில் இருந்த மெல்பன் கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் இரண்டாமிடத்திற்குத் தள்ளப்பட்டிருந்த நிலையில் இவ்வருடம் 10வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
கோவிட் பரவலை ஒவ்வொரு நகரமும் கையாண்ட விதம் மற்றும் கோவிட் கட்டுப்பாடுகள் புதிய பட்டியலைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்களித்துள்ளன.
The Global Liveability Index 2022:
1. Vienna
2.Copenhagen
3. Zurich
4. Calgary
5. Vancouver
6. Geneva
7. Frankfurt
8. Toronto
9. Amsterdam
10. Osaka and Melbourne
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
