
விக்டோரிய மாநில அரசானது இவ்வாலயத்துக்கு $160,000 டாலர்களை அதன் கலாச்சார மற்றும் பாரம்பரிய மையத்தை மேம்படுத்தும் நோக்கத்துக்காக வழங்குவதாகக் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. Minister for Multicultural Affairs Robin Scott மற்றும் Member for Carrum Sonya Kilkenny ஆகியோர் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.
இந்த அரச நிதியானது, கலாச்சார மற்றும் பாரம்பரிய மையத்தின் நுழைவாயில்கள் மற்றும் diveway ஆகியவற்றை மேம்படுத்த பயன்படுத்தப்படும். அத்துடன் மேலதிகமாக 300 வாகன நிறுத்துமிடங்களைச் சேர்த்துக்கொள்ளவும் இந்நிதி பயன்படுத்தப்படவுள்ளது. இத் திட்டத்தினால் Carrum Downs மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலுள்ள ஆயிரக்கணக்கான இந்து மதத்தவர்கள் பயனடைவார்களென அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மாநிலத்திலுள்ள இந்து சமூகத்தின் கலாசார மற்றும் ஆன்மீக தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்குடன் The Hindu Society of Victoria, 1982இல் நிறுவப்பட்டது.
Multicultural Affairs Robin Scott said, “The upgrades to the Shri Shiva Vishnu Temple will help our Hindu community enshrine and share their values of compassion, selflessness, harmony, tolerance and respect.”
“By working together with local communities, we are building a Victoria where everyone belongs, feels accepted and can freely participate and contribute.”
Member for Carrum Sonya Kilkenny said, “Our local Hindu community has been advocating for upgrades to the Cultural and Heritage Centre – we’ve listened and we’re getting it done.”
