மெல்பனின் தென்கிழக்குப் பகுதியில், sewage-கழிவுநீரில் கொரோனா வைரஸின் தடயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அப்பகுதியில் வாழ்பவர்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் 4 முதல் 6 வரையான காலப்பகுதியில் பின்வரும் பகுதிகளுக்குச் சென்றவர்கள் மற்றும் அங்கு வாழ்பவர்களில் எவருக்கேனும் இலேசான அறிகுறிகள் தோன்றினாலும் உடனடியாக தம்மை கோவிட் சோதனைக்கு உட்படுத்திக்கொள்ளுமாறு சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
- Clayton
- Clayton South
- Dingley Village
- Glen Waverley
- Mount Waverley
- Mulgrave
- Notting Hill
- Springvale
- Springvale South
- Wheelers Hill
குறித்த பகுதிகளில் உள்ள ஒருவர் கோவிட் தொற்றின் ஆரம்பக்கட்டத்தில் இருக்கலாம் அல்லது தொற்றுக்காலம் முடிவடைந்த ஒருவரின் உடலிலிருந்து வைரஸ் துணிக்கைகள் வெளியேறிக்கொண்டிருக்கலாம் என குறிப்பிடப்படுகிறது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
Share
