SKIP TO MAIN CONTENT

மக்கள் தொகையில் சிட்னியை முந்தும் நிலையில் மெல்பன்!

Sydney vs Melbourne
Melbourne está a punto de superar a Sídney en población Source: SBS

1 min read

Published


Skip to article content

சிட்னி மற்றும் மெல்பன் பெருநகரங்களில் வாழ்ந்துவரும் மக்களின் எண்ணிக்கையில் 1930ம் ஆண்டுக்குப் பின் மிகக்குறுகிய வித்தியாசம் ஏற்பட்டுள்ளதாக அண்மையில் புள்ளிவிவரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

2019-20 நிதியாண்டுக்கான புள்ளிவிவரங்களின்படி சிட்னியின் மக்கள்தொகை 5.3 மில்லியனாக காணப்படும் அதேநேரம் மெல்பனின் மக்கள்தொகை 5.16 மில்லியனாக காணப்படுகிறது.

இரு நகரங்களுக்கும் இடையிலான இடைவெளி 2 லட்சத்து 5 ஆயிரம் பேராகும்.

கடந்த 1930ம் ஆண்டு இருநகரங்களுக்கும் இடையில் இதேபோன்று சிறிதளவு இடைவெளி காணப்பட்டதாகவும், சிட்னியின் மக்கள் தொகை 1.2 மில்லியனாகவும் மெல்பனின் மக்கள் தொகை 995,000 ஆக காணப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.

2019-20 நிதியாண்டில் சிட்னியின் மக்கள் தொகை 57,107 பேரால் அதிகரித்திருக்கிறது.  மெல்பனில் 80,088 பேரால் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை கோவிட் பரவல் இவ்விரு நகரங்களின் மக்கள்தொகையில் எவ்வாறு தாக்கம் செலுத்தியுள்ளது என்பது அடுத்த நிதியாண்டுக்குரிய புள்ளிவிவரங்களிலிருந்து தெரியவரும்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 

Listen to SBS Tamil at 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2.

Find your area’s radio frequency by visiting our tune in page.

For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now