SKIP TO MAIN CONTENT

தலைமை தாங்கத் தயார்: Michael Clarke அறிவிப்பு

Former Australian Test cricketer Michael Clarke
Source: AAP

1 min read

Published

Updated



Skip to article content

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமைத்துவ பதவிக்கு மீண்டும் திரும்புவதற்கு தயார் என்று முன்னாள் தலைவர் Michael Clarke ஆஸ்திரேலிய கிரிக்கெட் சபையிடம் அறிவித்துள்ளார். "Daily Telegraph" ஊடகத்துக்கு வழங்கிய சிறப்பு செவ்வியில் அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற Michael Clarke, அணித்தலைவராக பதவி வகித்த காலத்தில் ஆஸ்திரேலிய அணியை பல நெருக்கடிகளிலிருந்து மீட்டவர். எத்தனையோ வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர்.

பந்தை சுரண்டிய விவகாரத்தில் மூன்று வீரர்கள் தடை செய்யப்பட்டுள்ளதை அடுத்து, ஆஸ்திரேலிய அணியின் ஸ்திரத்தன்மை குலைந்துபோயுள்ளதாகவும் அணிவீரர்களின் மத்தியில் மனதளவில் சோர்வு ஏற்பட்டுள்ளதாக தான் உணர்வதாகவும் Michael Clarke தனது செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து அணியையும் அணிவீரர்களையும் மீட்டெடுப்பதற்கு தன்னால் முடியும் என்றும், இது போன்ற சந்தர்ப்பங்களில் அணியை வழிநடத்தும் சிறந்த தலைமைத்துவ திறன் தனக்கு உண்டு என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

மைக்கல் கிளார்க்கின் அறிவிப்புக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் சபை இதுவரை எந்த பதிலும் வழங்கவில்லை.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now