SKIP TO MAIN CONTENT

கடவுச்சொற்களின் (password) பாவனை முடிவுக்கு வருகிறது - Microsoft

இணையவழி திருடர்களின் (hackers) செயற்பாட்டைக் கட்டுப்படுத்த, Microsoft நிறுவனம் கடவுச்சொற்கள் (password) பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்தது.

The Microsoft logo
File photo Source: AAP

1 min read

Published

By Kulasegaram Sanchayan


Skip to article content

Outlook, OneDrive மற்றும் FamilySafety போன்ற செயலிகளை கடவுச் சொல் இல்லாமல் பயன்படுத்தும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதாக Microsoft நிறுவனம் கடந்த வாரம் அறிவித்தது.

கடவுச் சொல்லுக்குப் பதிலாக, Windows Hello என்ற அங்கீகரிப்பு வழங்கும் செயலி (Authenticator app) ஒன்றைப் பயன்படுத்தலாம் அல்லது பயனர்களின் தொலைபேசி அல்லது மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்ட சரிபார்ப்புக் குறியீடு (verification code) ஒன்றைப் பயன்படுத்த முடியும்.

data protection concept, cyber security, secured access with password
data protection concept, cyber security, secured access with password on screen of smartphone mobile Source: iStockphoto

Microsoft செயலிகளைப் பயன்படுத்தும் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுடன் இந்த பயன்பாட்டு முறை வெற்றிகரமாகப் பரீட்சிக்கப் பட்டதைத் தொடர்ந்து, அடுத்த சில வாரங்களில் இது உலகளாவிய அளவில் பயன்பாட்டிற்கு வருகிறது.

தனித்துவமான கடவுச் சொற்களை உருவாக்கி, நினைவில் வைத்து, அடிக்கடி மாற்றுவார்களா?

மக்கள் சிக்கலான மற்றும் தனித்துவமான கடவுச் சொற்களை உருவாக்கி, அவற்றை நினைவில் வைத்து, அடிக்கடி மாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் அதைச் செய்வதை யாரும் விரும்புவதில்லை.  இந்த புதிய முறையால், மக்களின் சாதனங்களில் இணைய வழி திருடர்கள் உள்நுழைவது கணிசமாக கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Hacker attacking internet
Hacker attacking internet Source: seksan Mongkhonkhamsao


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now