SKIP TO MAIN CONTENT

Microsoft Word இல் Hackers கைவரிசை - வங்கிக் கணக்குகள் திருட்டு

பல மில்லியன் மக்கள் பயன்படுத்தும் Microsoft Word இல் முக்கிய பாதுகாப்புக் குறைபாடு (bug) ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Microsoft moves quickly to patch Word bug that steals users' bank details.

 iStock
Targets for the exploit included millions of recipients primarily in Australia. Source: iStock

1 min read

Published

By Praba Maheswaran

Source: SMH


Skip to article content

Dridex banking Trojan என அறியப்படும் இந்த bug, பயனாளர்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளைக் குறிவைத்துள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்ட கணினியிலிருந்து பாவனையாளர்களின் வங்கி விவரங்கள் மற்றும் கடவுச்சொற்களை hackers திருடிவிடுகின்றனர்.

"Sending it to Australian organisations early on Tuesday morning Australian time/late Tuesday US time provided a longer window of possible exposure," Bryan Burns of Proofpoint said.

கடந்த வார இறுதியிலேயே இணைய பாதுகாப்பு நிறுவனங்களான McAfee மற்றும் FireEye உட்பட்ட நிறுவனங்கள் இதனைக் கண்டுபிடித்தனர்.

மின்னஞ்சல் வழியாக Word ஆவணம் ஒன்று இணைத்து அனுப்பப்படும். அந்த ஆவணத்துடனேயே குறிப்பிட்ட Bug தரவேற்றம்  செய்யப்பட்டிருக்கும். அந்த ஆவணத்தை நீங்கள் திறக்கும் பொது, அனுப்பப்பட்ட அந்த bug செயல்படுத்தப்பட்டுவிடும். செயல் படுத்தப்பட்ட அந்த Bug, கணினியிலிருந்து உங்கள் வங்கிக் கணக்குட்பட்ட விவரங்களை அந்த hackers - இணையவழித் திருடர்களுக்கு அனுப்பிவைக்கும்.

குறிப்பிட்ட அந்த மின்னஞ்சலின் subject line - தலைப்பு "Scan Data" என்று  காணப்பட்டுள்ளது. மின்னஞ்சலுடன் வந்த அந்த இணைப்பின் பெயர் 'Scan_xxxxxx.doc' என இருந்துள்ளது.

A similar exploit allowed hackers to steal more than £20 million ($33 million) from British bank accounts in 2015, the BBC reported.

ஆஸ்திரேலியாவே இத் திருடர்களின் முதன்மை இலக்காக இருந்துள்ளதென்று Proofpoint தெரிவித்துள்ளது.

2015 ம் ஆண்டில் இதேமாதிரியான ஒரு தாக்குதல் மூலம் பிரித்தானிய வங்கிக் கணக்குகளிலிருந்து £20 மில்லியன் திருடப்பட்டதாக BBC தெரிவித்துள்ளது.

A Microsoft spokesperson said: "[The vulnerability] was addressed in the April security update released on April 11, 2017.

Microsoft Office மென்பொருளின் பிந்திய புதுப்பித்தலைப் (update) பயன்படுத்தியவர்களின் பாதுகாப்பு தற்போது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக Microsoft பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now