ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேற அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, வருடமொன்றிற்கு இருபது முதல் முப்பதாயிரத்தால் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வருடமொன்றிற்கு 190,000 பேர் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேற அனுமதிக்கப்படும் நிலையில், அரசு அறிமுகப்படுத்தியுள்ள கடுமையான விசா பரிசீலனை நடைமுறைகளால், இவ்வருடம் 160,000 - 170,000 பேர் மாத்திரமே குடியேற அனுமதிக்கப்படுவர் என The Australian செய்தி வெளியிட்டுள்ளது.
இது 2010ம் ஆண்டுக்கு முன்னர் வருடமொன்று இங்கு குடியேற அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு ஒப்பானதாகும்.
இதேவேளை அரசு அறிமுகப்படுத்தியுள்ள கடுமையான விசா பரிசீலனை நடைமுறைகளால், இவ்வருடம் இங்கு நிரந்தரமாக குடியேற அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைவடையலாம் என்பதை Home Affairs அமைச்சர் Peter Dutton உறுதிப்படுத்தியுள்ளார்.
Share
