அரச கொடுப்பனவு பெற 3 வருடங்கள் வரை காத்திருக்க வேண்டும்!

welfare payments

NO ARCHIVING Source: AAP

அடுத்த வருடம் ஜுலை முதல் ஆஸ்திரேலியாவில் குடியேறுபவர்கள், குறிப்பிட்ட சில அரச மானியங்களைப் பெறுவதற்கு, 3 வருடங்கள் வரை காத்திருக்கும்வகையில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது.

கருவூலக்காப்பாளர் Treasurer Scott Morrison-ஆல் முன்வைக்கப்பட்டுள்ள Mid-year economic and fiscal Outlook-இலேயே இம்மாற்றம் முன்மொழியப்பட்டுள்ளது.

Carers Allowance-பராமரிப்பாளர் கொடுப்பனவு, Family Tax Benefit மற்றும் paid parental leave-கொடுப்பனவுடனான மகப்பேற்று விடுமுறை மானியங்களைப் பெறுவதற்கே இவ்வாறு 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

இதுவரை காலமும் 2 வருடங்களாக இருந்த இக்காத்திருப்பு காலப்பகுதியை 3 வருடங்களாக்குவதன் மூலம், அடுத்த 4 ஆண்டுகளில் 1.3 பில்லியன் டொலர்களைச் சேமிக்க முடியுமென அரசு கருதுகின்றது.

இதேவேளை குடும்ப விசாவின் கீழ் தமது உறவினர்களை இங்கு வரவழைப்பவர்கள், 3 வருடங்களுக்கு அவர்களைப் பராமரிப்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவேண்டும்.

இப்புதிய மாற்றத்திலிருந்து பாதிக்கப்படட சில தொகுதியினருக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படுமென குறிப்பிடப்படுகிறது.

 


1 min read

Published

Updated

Presented by Renuka



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now