மேற்கு ஆஸ்திரேலிய எல்லையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் சோதனையை மேற்கொண்ட பொலிஸார் சுமார் 9 மில்லியனுக்கும் மேற்பட்ட டொலர்களை மீட்டுள்ளனர்.
சமூகத்தவர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கடந்த சில வாரங்களாக சந்தேகத்திற்கிடமான வாகனங்களை நிறுத்தி போதைப்பொருள் சோதனையை மேற்கொண்ட பொலிஸார் குறித்த தொகைப் பணத்தை மீட்டுள்ளனர்.
50 டொலர் மற்றும் 100 டொலர் நோட்டுக்களாக இப்பணம் மீட்கப்பட்டுள்ளது.
Methylamphetamine என்ற போதைப்பொருள் விற்பனையூடாக பெறப்பட்ட பணத்தொகை இதுவெனவும், குறித்த தொகையை நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திற்கு எடுத்துச்செல்ல முற்பட்டபோது பொலிஸாரிடம் அகப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் பெர்த்தைச் சேர்ந்த 5 ஆண்கள், குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த மற்றுமொருவர் என மொத்தம் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தடுப்புக்காவலில் உள்ள இவர்கள் அனைவருக்கும் பிணையில் செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
