SKIP TO MAIN CONTENT

விக்டோரியாவில் அடுத்த வாரம் நடைமுறைக்கு வரும் புதிய சாலை விதி!

roadside eye testing
Picture for representational purpose only. Source: Getty Images

1 min read

Published

Updated


Skip to article content

விக்டோரியா மாநிலத்தில் cyclists-சைக்கிளோட்டிகளைப் பாதுகாக்கும்வகையில் புதிய சாலை விதி நடைமுறைக்கு வருகிறது.

இதன்படி 60km/h க்கு உட்பட்ட வேகக்கட்டுப்பாடுள்ள சாலையில் சென்றுகொண்டிருக்கும் வாகன ஓட்டி, சைக்கிளில் சென்றுகொண்டிருப்பவரை முந்திச் செல்லும்போது(overtake) வாகனத்திற்கும் சைக்கிளோட்டிக்கும் இடையில் குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

Only Victoria and the Northern Territory are yet to act on introducing or trialling mandatory minimum distance passing laws.
An illustration of the minimum passing distance in areas under 60 km/hr Source: ACT government

அதேபோல் 60km/h க்கு மேற்பட்ட வேகக்கட்டுப்பாடுள்ள சாலை எனில், வாகனத்திற்கும் சைக்கிளோட்டிக்கும் இடையில் குறைந்தது 1.5 மீட்டர் இடைவெளி இருக்கவேண்டும்.

அதுமட்டுமல்லாமல் சாலையில் செல்லும் சைக்கிளோட்டிகளுக்குத் தேவையான இடத்தை வழங்குவதற்கு ஏதுவாக வீதியிலுள்ள solid lines, double lines, tram lane lines, islands ஆகியவற்றை கடந்து(cross) செல்வதற்கு(பாதுகாப்பான சூழ்நிலைகளில் மாத்திரம்) வாகன ஓட்டிகளுக்கு விதிவிலக்கு உண்டு.

இப்புதிய சாலை விதி எதிர்வரும் திங்கட்கிழமை-ஏப்ரல் 26ம் திகதி நடைமுறைக்கு வருகிறது.

இந்த விதிமுறையை மீறுபவர்கள் 2 demerit புள்ளிகள் மற்றும் 330 டொலர்களை அபராதமாக செலுத்த நேரிடும்.

விக்டோரியா மாநிலத்தில் கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 24 சைக்கிள் ஓட்டிகள் சாலை விபத்துக்களில் கொல்லப்பட்டிருந்தனர்.

இதையடுத்து ஏனைய மாநிலங்களைப் போலவே விக்டோரியாவிலும் இந்த விதிமுறையை நடைமுறைப்படுத்த வேண்டுமென RACV Victoria விடுத்த வேண்டுகோளுக்கிணங்க அடுத்தவாரம் இப்புதிய சட்டம் நடைமுறைக்கு வருகிறது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now