Moderna மருந்து நிறுவனத்தின் இந்த ஊடக அறிக்கை நேற்று வெளி வந்த நிலையில் இன்று காலை Federal சுகாதார அமைச்சர் Greg Hunt இதனை உறுதி செய்த்துள்ளார்.
இந்த ஆண்டிற்குள் முதலில்10 மில்லியன் Moderna தடுப்பு மருந்துகள் மற்றும் அடுத்த ஆண்டு மீதமுள்ள 15 மில்லியன் தடுப்பு மருந்துகள் ஆஸ்திரேலியாவை வந்தடையும் என்பதனையும் அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
நாட்டில் தற்போது Moderna, Pfizer போன்ற mRNA தடுப்பு மருந்துகள் தாயாரிப்பதற்கான வசதிகள் இல்லாததினால் இவ்வகை கொரோனா தடுப்பு மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டு வரும் நிலையில் Moderna தடுப்பு மருந்துகளை ஆஸ்திரேலியாவில் தாயாரிக்க தயாராக இருப்பதாக Moderna மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
“Ancestral strain” என சொல்லப்படுகிற உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் வகையிலுருந்து Moderna கோவிட் தடுப்பு மருந்து திறனே பாதுகாக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
Moderna கோவிட் தடுப்பு மருந்து நாட்டின் Therapautic Goods Administration மருந்து கட்டுப்பாட்டு அமைப்பினால் ஒப்புதல் வழங்கப்பட்ட பிறகு முதலாவதாக ஒரு மில்லியன் மருந்துகள் செப்டம்பர் மாதமளவிலும் அடுத்த 9 மில்லியன் மருந்துகள் டிசம்பர் மாதமளவிலும் நாட்டை வந்தடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Moderna கோவிட் தடுப்பு மருந்து ஐக்கிய ராஜ்ஜியம், கனடா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் சிக்கப்பூரில் தற்போது பாவனையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Share
