கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தைத் தயாரிக்கும் பணியில் பல நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளநிலையில், தமது தடுப்பு மருந்து 94.1 வீதம் செயலாற்றக்கூடியது என அமெரிக்காவின் Moderna நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து தமது தடுப்பு மருந்திற்கு அமெரிக்கா, ஐரோப்பியக் கட்டுப்பாட்டு ஆணையங்களிடம், அவசர ஒப்புதலைப் பெறவிருப்பதாக Moderna நிறுவனம் கூறியுள்ளது.
தமது பரிசோதனை முடிவுகளின்படி Moderna தடுப்பு மருந்து மோசமான பக்கவிளைவுகள் இன்றி சுமார் 94.1 வீதம் செயலாற்றக்கூடியது என்பது நிரூபணமாகியுள்ளதாகவும், இதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும் இந்நிறுவனத்தின் தலைமை மருத்துவ அதிகாரி Tal Zaks தெரிவித்துள்ளார்.
நோய் தொற்று தீவிரமாக உள்ளவர்களுக்கும் இந்த தடுப்பூசி பயனளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தடுப்பு மருந்து செயற்றிறன் மிக்கதாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக Moderna நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்த பின்னணியில், தற்போது ஆதாரங்களின் அடிப்படையில் அவசர ஒப்புதலைப்பெறும் நடவடிக்கையில் இந்நிறுவனம் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share
