SKIP TO MAIN CONTENT

நவம்பர் மாதம் மாத்திரம் விமானங்களில் வந்திறங்கிய 2316 அகதிகள்!

More asylum seekers arriving in Australia by plane than boats
Source: AAP

1 min read

Published


Skip to article content

கடந்த நவம்பர் மாதம் மாத்திரம் நாளொன்றுக்கு சராசரியாக 77 அகதிகள் ஆஸ்திரேலிய விமானநிலையங்களில் வந்திறங்கி தஞ்சம்கோரியிருப்பதாக அரசாங்கள் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.

விமானங்களின் மூலம் நாட்டுக்குள் வருகின்ற தஞ்சக்கோரிக்கையாளர்களின் புள்ளிவிவரங்களை எதிர்க்கட்சி கோரியதற்கு இணங்க அரச தரப்பினால் செனெட் சபையில் முன்வைக்கப்பட்ட அறிக்கையில் மேற்படி விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானங்களின் மூலம் நாட்டுக்குள் நுழையும் அகதிகளின் எண்ணிக்கை கடந்த ஜூன், ஜூலை, ஓகஸ்ட் மாதங்களுடன் ஒப்பிடுகையில் நவம்பரில் அதிகரித்திருப்பதாகவும், நவம்பர் மாதம் மாத்திரம் இரண்டாயிரத்து 316 பேர் ஆஸ்திரேலிய விமானநிலையங்களில் வந்திறங்கி தஞ்சம்கோரியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வந்திறங்கியவர்களில் 27 சதவீதமானவர்கள் மலேசியர்கள் என்றும் 17 சதவீதமானவர்கள் சீனர்கள் என்றும் 14 சதவீதமானவர்கள் இந்தியர்கள் என்றும் 5 சதவீதமானவர்கள் வியட்னாமியர்கள் என்றும் தெரிவிக்கபட்டிருக்கிறது.

இது குறித்து உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் கருத்து தெரிவிக்கும்போது - இவ்வாறு விமானங்களின் மூலம் வந்திறங்கி தஞ்சம் கோருபவர்களுக்கு விசா வழங்குவதில் தமது அரசு மிகுந்த இறுக்கம் காண்பித்துவருவதாக கூறியுள்ளார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now