SKIP TO MAIN CONTENT

மெல்பேர்ன்,சிட்னி நகரங்களில் வீட்டு விலை சரிவு!

An aerial image of waterfront properties in Sydney.
AMP predicts housing prices in Sydney and Melbourne will fall another five per cent this year. (AAP) Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

மெல்பேர்ன் மற்று சிட்னி நகரங்களில் படிப்படியான வீட்டு விலை சரிவு ஏற்பட ஆரம்பித்துள்ளதாக, வீட்டுச்சந்தை நிலைவரங்கள் தொடர்பான  ஆய்வுகளை மேற்கொள்ளும் அமைப்பான Corelogic தெரிவித்துள்ளளது.

இந்த அமைப்பு மேற்கொண்ட ஆய்வின்படி, சிட்னியில் வீட்டு விலைகள் கடந்த நான்கு மாதங்களில் 1.9 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், இதேகாலப்பகுதியில் மெல்பேர்னில் 0.5 சதவீத விலைச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

 

AMP Capital நிறுவனத்தை சேர்ந்த பொருளாதார நிபுணர் Shane Oliver இந்த வீட்டு விலைச்சரிவு பற்றி கூறுகையில் - வங்கிக்கடன்களை வழங்குவதில் கொண்டுவரப்பட்டுள்ள தர மாற்றங்களும் இதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார். தற்போதுள்ள நிலை தொடருமானால் அடுத்தவருடம் இந்த விலை வீழ்ச்சி 5 சத வீதமாக அதிகரிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.  வீட்டு விற்பனையின் பிரதான அளவீட்டு அலகான வாராந்த ஏல விற்பனை தரவுகள் இரண்டு மாநிலங்களிலும் அவ்வளவு ஆரோக்கியமாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மெல்பேர்ன், சிட்னி நிலைவரங்கள் இவ்வாறு இருக்க, பேர்த் - டார்வின் வீட்டு விலைகள் - குறிப்பாக பிறிஸ்பன் மற்றும் கன்பரா வீட்டு விலைகள் -  அவ்வளவு மோசமில்லை என்றும் பிறிஸ்பனில் அதிகரித்துவரும சனத்தொகை அங்கு வீட்டு கொள்முதல் சந்தையை சீராக பேணிவருவதாகவும் Shane Oliver தெரிவித்துள்ளார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now