SKIP TO MAIN CONTENT

விக்டோரியாவில் கோவிட் கட்டுப்பாடுகளை மீறிய 1600 சிறுவர்களுக்கும் அபராதம்!

Vic Police
Source: Twitter

2 min read

Published

Updated


Skip to article content

விக்டோரிய மாநிலத்தில் கோவிட் கட்டுப்பாட்டை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டில் 18 வயதுக்கு உட்பட்ட சுமார் 1626 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டவர்களில் 97 பேர் மாத்திரமே அத்தொகையை செலுத்தியிருப்பதாகவும் 273 பேருக்கான அபராதத்தொகை ரத்துசெய்யப்பட்டதாகதாகவும் விக்டோரிய Attorney-General Jaclyn Symes தெரிவித்தார்.

இவர்களில் பெரும்பாலானோருக்கு முகக்கவசம் அணியத்தவறியமைக்காகவே அபராதம் விதிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.

எனினும் சிலருக்கான அபராதத்தொகை 1600 டொலர்களுக்கும் அதிகம் எனவும் சிறுவர்கள் மீது இவ்வளவு அதிகளவான அபராதத்தொகை விதிக்கப்படுவது நியாயமாகாது எனவும் Youthlaw அமைப்பைச் சேர்ந்த Tiffany Overall தெரிவித்துள்ளார்.

உதாரணமாக ஆங்கிலமொழிப்புலமையற்ற 14 வயதுச் சிறுமியொருவர் கொரோனா கட்டுப்பாடு நடைமுறையிலிருந்தபோது தனது வீட்டிலிருந்து 5 கிலோமீட்டருக்கு வெளியே பயணம் செய்ததற்காக 1652 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டதாக Tiffany Overall சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் கோவிட் பரவல் காலத்தில் சிறுவர்கள் மீது விதிக்கப்பட்ட அபராதங்கள் அனைத்தும் மீளப்பெறப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல்தொண்டை நோவுஇருமல்உடற்சோர்வுசுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now