ஆஸ்திரேலியாவில் தற்கொலையால் பாதிக்கப்பட்டோர் 10 மில்லியன்!

"தற்கொலை செய்த ஒருவரை நேரடியாகத் தெரியும்" என்று ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்களில் 56 சதவீதத்தினர் கூறியுள்ளனர்.

More than 3,000 people died by suicide in Australia in 2017.

More than 3,000 people died by suicide in Australia in 2017. Source: Getty

10 மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு தற்கொலை செய்து கொண்ட ஒருவரை நேரடியாகத் தெரிந்திருக்கிறது.

தற்கொலை முயற்சிகளைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் Suicide Prevention Australia என்ற அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பின்படி, தற்கொலை செய்யும் ஒருவர், பாரிய அளவில் மற்றவர்களைப் பாதிக்கிறார் என்பது தெளிவாகியுள்ளது.

வயது வந்த ஆஸ்திரேலியர்களிடையே 56 சதவீதமானவர்களுக்கு, தற்கொலை செய்து கொண்ட ஒருவரை நேரடி தெரிந்திருக்கிறது.  18 முதல் 24 வயதிற்கிடையிலானவர்களில், இருவரில் ஒருவருக்கு தற்கொலை செய்து கொண்ட ஒருவரை தெரிந்திருக்கிறது.

Nieves Murray
Source: SBS

"ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் போது, அந்த செயல் அவரை மட்டும் பாதிப்பதில்லை. அவரது குடும்பத்தையும் நண்பர்களையும் பாதிக்கிறது.  வேலை இடத்திலும் சமூகத்திலும் கூட அதன் பாதிப்பு இருக்கிறது" என்கிறார் Suicide Prevention Australia  என்ற அமைப்பின் தலைமை நிர்வாகி Nieves Murray.

தற்கொலை ஏற்படும் பின் தாக்கம் மிகவும் அதிகம் என்று அவர் SBS செய்திப் பிரிவினரிடம் மேலும் கூறினார். கிடைத்துள்ள தரவுகளின்படி, 2017ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் 3,128 பேர் தற்கொலை செய்துள்ளார்கள்.

ஒருவரை தற்கொலைக்கு தூண்டும் சமூக, உளவியல் காரணங்களையும் கருத்துக் கணிப்பு கணக்கெடுத்திருக்கிறது என்றும், சில ஆச்சரியமான முடிவுகள் பெறப்பட்டுள்ளன என்றும் Nieves Murray கூறினார்.

ஒருவரின் மனநலம் மட்டும் அவரை தற்கொலை செய்ய தூண்டுவது இல்லை என்றும், உறவுகள் முறிந்தாலோ அல்லது குடும்ப சூழ் நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டாலோ கூட தற்கொலைக்கு சிலர் தூண்டப்படுகிறார்கள் என்று Nieves Murray மேலும் சொன்னார்."

You don't need to be an expert to talk about suicide. You just need to listen & be ready to help. Check out #YouCanTalk to help get you started #WSPD2019 https://t.co/KF5CK8Fanz pic.twitter.com/e4BcrMjIYN

யாராவது மன உழைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்று அவதானித்தால், அவர்கள் நலன் குறித்து அவர்களிடம் விசாரிக்குமாறு ஆஸ்திரேலியர்களை ஊக்குவிக்கிறார் Nieves Murray.

“தற்கொலை செய்யும் சிந்தனை உள்ளவர்களிடம், அது குறித்து யாராவது கேட்டால், தற்கொலை செய்ய அவரை அது மேலும் தூண்டும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். அந்த சிந்தனை மாற்றப் பட வேண்டும். ஒருவரின் நலன் குறித்து மற்றவர் அக்கறையுடன் கேட்கும்போது, தற்கொலை சிந்தனைகள் அவரிடமிருந்து அகன்று விடுகின்றன. எனவே ஒருவரின் நலன் குறித்துக் கேட்கும் போது, அவரது உயிரை நீங்கள் காப்பாற்றக் கூடும்.”

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியாகத் தற்கொலை செய்பவர்கள், நடுத்தர வயது ஆண்கள் தான் என்றார் அவர்.

தற்கொலைகளைத் தவிர்ப்பதற்காக, ஆஸ்திரேலிய அரசு அண்மையில் அது குறித்த ஒரு ஆலோசகரைப் பணிக்கமர்த்தியுள்ளது. அதனை வரவேற்று இருக்கும் Nieves Murray, இது குறித்து அரசு எல்லா மட்டங்களிலும் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டார்.

“சாலை விபத்துகளில் இறப்பவர்களை விட தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக இருக்கிறது. ஆகவே, இது குறித்து நாம் இன்னும் பல செய்ய இருக்கிறது.”

ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதிக்கும் 17 ஆம் தேதிக்கும் இடையில் YouGov நடத்திய கருத்துக்கணிப்பில் 1,064 வயது வந்த ஆஸ்திரேலியர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.

 

உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவருக்கோ தற்கொலை செய்யும் எண்ணம் இருந்தால், ஆதரவு பெற, நீங்கள் Lifeline ஐ 13 11 14 www.lifeline.org.au, மற்றும் Suicide Call Back Service ஐ 1300 659 467; 25 வயதிற்குக் குறைந்தவர்கள்  Kids Helpline ஐ 1800 55 1800 என்பவற்றை தொடர்பு கொள்ளவும்.

 

மன ஆரோக்கியம் குறித்த மேலதிக தரவுகளுக்கும் ஆதரவுக்கும் beyondblue 1300 224 636 www.beyondblue.org.au தொடர்பு கொள்ளவும்.


2 min read

Published

Updated

By Nick Baker, Kulasegaram Sanchayan




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now