SKIP TO MAIN CONTENT

மனிதாபிமான விசாவில் ஆஸ்திரேலியா வர விண்ணப்பிக்கும் தென்னாபிரிக்க விவசாயிகள்!

Dutton considers refugee visas for 'persecuted' white South Africa farmers.
Source: SBS

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

தென்னாபிரிக்க வெள்ளையின விவசாயிகள் 200 பேர் ஆஸ்திரேலியாவுக்கான humanitarian-மனிதாபிமான விசாவுக்காக விண்ணப்பித்துள்ளதாக தெரியவருகின்றது.

வெள்ளையினத்தவர்களாக இருப்பதால் தாம் தாக்குதலுக்குள்ளாவதாகத் தெரிவிக்கும் இவர்கள் மனிதாபிமான விசாவில் ஆஸ்திரேலியாவில் குடியேற முற்படுவதாக உள்துறை அமைச்சின் துணைச் செயலாளர் Malisa Golightly செனற் விசாரணைக் குழுவிடம்  தெரிவித்துள்ளார்.

மேலும் 213 தென்னாபிரிக்க வெள்ளையின  விவசாயிகள் தொடர்பிலான 89 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

தென்னாபிரிக்க வெள்ளையின விவசாயிகள் வன்முறையை எதிர்கொள்கிறார்கள் என்றும் அவர்களது நிலங்கள் அபகரிக்கப்படுகிறது என்றும் அவர்களுக்கு சிறப்பு சலுகைகளை ஆஸ்திரேலியா வழங்க வேண்டும் என்றும் கடந்த மார்ச் மாதம் உள்துறை அமைச்சர் Peter Dutton தெரிவித்த கருத்துக்களால் சர்ச்சை ஏற்பட்டிருந்த அதேநேரம் தனது குடிமக்கள் யாரும் ஆபத்தில் இல்லை என்று தென்னாபிரிக்க அரசாங்கம் மறுப்பு வெளியிட்டிருந்தது.

இந்தப் பின்னணியில் 200 க்கும் மேற்பட்ட தென்னாபிரிக்க விவசாயிகள் மனிதாபிமான விசாவுக்காக விண்ணப்பிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now