விக்டோரியா மாநிலத்தில் கொரோனா தொடர்பிலான கட்டுப்பாடுகளை மீறிய சுமார் ஆறாயிரம் பேருக்கு பொலீஸார் தலா $1652 அபராதம் விதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பொலீஸார் விதித்த இந்த தண்டப்பணத்தின் மூலம் மாநில அரசுக்கு சுமார் 80 லட்சம் டொலர் நிதி கிடைக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
விக்டோரியாவில் இவ்வாறு தண்டனைக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தோடு ஒப்பிடும்போது நான்கு மடங்கு என்றும் குயின்ஸ்லாந்து மாநிலத்தோடு ஒப்பிடும்போது மூன்று மடங்கென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாநிலங்களோடு ஒப்பிடும்போது விக்டோரியாவில் பொலீஸார் இறுக்கமான கட்டுப்பாடுகளை பேணியது இதற்கு காரணமாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொரோனா கால கட்டுப்பாடுகளை மீறி அபராத சீட்டினை பெற்றவர்கள் குயின்ஸ்லாந்தில் 2169 என்றும் நியூ சவுத் வேல்ஸில் 1290 என்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் 271 என்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில் 107 என்றும் Northern Territory-யில் 50 என்றும் டஸ்மேனியா மற்றும் ACT-யில் குற்றமிழைத்தவர்களாக எவரும் பதிவுசெய்யப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
