ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இரண்டு சதவீத சம்பள உயர்வு கிடைக்கவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது பெற்றுவருகின்ற ஆண்டு வருமானமான 207,100 டொலர்களுக்கு மேலதிகமாகவே இந்த சம்பள உயர்வு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பள உயர்வு அறிவிப்பு குறித்து பல்வேறு தரப்புக்களில் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஏழு லட்சம் பணியாளர்களுக்குரிய விடுமுறை மற்றும் வார இறுதி நாள் விசேட ஊதியங்களுக்கு அரசு வேட்டு வைத்துள்ள நிலையில் ஏற்கனவே உயர் ஊதியங்களில் மிதக்கும் எம்.பிக்கள் மேலும் ஊதிய உயர்வை பெற்றுக்கொள்ளவுள்ளார்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உதாரணத்துக்கு சுமார் ஐந்து லட்சம் டொலர்களை வருட வருமானமாக பெற்றுக்கொள்ளும் பிரதமர் Scott Morrison-இன் ஊதியம் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் மேலும் பத்தாயிரம் டொலர்களினால் கூடவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுமார் 27 லட்சம் பேர் இன்னமும் மாணவர் கடன்சுமைகளைக்கொண்டிருப்பதாகவும் சராசரியாக ஒவ்வொருவருக்கும் சுமார் 20 ஆயிரம் டொலர் கல்விக்கடனுள்ளதையும் தொழிற்சங்க அமைப்புக்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.
Share
