சம்பவ இடத்துக்குப் பொலீஸார் விரைந்து சென்றபோது, குறித்த நபர் தன்னையும் காயப்படுத்திக்கொண்டதாகவும், அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை முன்னிரவு 7.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின் முழுமையான பின்னணி எதுவும் தற்போதைக்குத் தெரியவராத நிலையில், பொலீஸார் முழுமையான விசாரணைகளில் இறங்கியுள்ளனர். தற்போதுவரைக்கும் வெளியாகியுள்ள தகவல்களின்படி -
நேற்றிரவு வீட்டுக்குள் நுழைந்து பல்வைத்திய தாதியாகப் பணிபுரியும் பூனம் சர்மா மீது தாக்குதல் நடத்தியதாகவும், 6 வயது மகள் வனேஸாவையும் கத்தியால் குத்தியதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில் படுகாயங்களுடன் வீட்டைவிட்டு வெளியில் ஓடிவந்த பூனம் சர்மா, அயலவர்களிடம் உதவிகேட்டு குழறியதாகவும் பின்னர் அப்படியே நிலத்தில் வீழ்ந்துவிட்டதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
அயலவர்கள் உடனடியாகப் பொலீஸாரை அழைத்ததை அடுத்து, அங்கு வந்த பொலீஸார் தாக்குதலாளி என்று கருதப்பட்ட நபரை கைது செய்ய முயற்சித்திருக்கிறார்கள். அப்போது அவர் தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ள முயற்சித்ததாகவும் பொலீஸார் அவர் மீது pepper-spray அடித்து அவரைக் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட நபர் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட - வாடகை வாகனம் ஓட்டுபவரான ராஜ் சர்மா (வயது 40) என்றும் அவர் அந்த பெண்ணின் கணவர் என்றும் போலீசார் கூறுகின்றனர்.
இதன்பின்னர், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, இளைய மகள் வனேஸா கத்திக்குத்துக் காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும், அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதும், சிகிச்சை பலனளிக்காமல் அங்கு அவர் உயிரிழந்தார் எனவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் வீட்டிலிருந்து தப்பியோடிய பத்து வயதான மூத்த மகள் எந்தக் காயமுமின்றி மீண்டிருக்கிறார்.
Readers seeking crisis support can contact Lifeline on 13 11 14, the Suicide Call Back Service on 1300 659 467 and Kids Helpline on 1800 55 1800 (for young people aged up to 25). More information and support with mental health is available at Beyond Blue.org.au and on 1300 22 4636.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
