SKIP TO MAIN CONTENT

புதுப்பொலிவுடன் புதிய தரத்துடன் மீண்டும் வருகிறது Motorola Razr!

Motorola Razr
Source: Motorola

1 min read

Published

Updated


Skip to article content

ஒரு தசாப்தகாலத்துக்கு முன்னர் கைத்தொலைபேசி உலகத்தை ஆட்சி செய்த மோட்ரோலா மீண்டும் புதுப்பொலிவுடன் தனது வாடிக்கையாளர்களை தேடிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மடிப்பதற்கு வசதியான துடிப்பான தொலைபேசியாக தன்னை எல்லோரிடமும் கொண்டுபோய் சேர்த்திருந்த மோட்ரோலா, தற்போது புதிய ஸ்மார்ட் போன் உலகத்தின் சகல தேவைகளையும் முழுமையாக புரிந்துகொண்டு தனது புதிய ரக தொலைபேசியுடன் சந்தைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்ரோலா அறிமுகப்படுத்தவுள்ள Motorola Razr என்ற இந்த புதிய வகை தொலைபேசி தொடுதிரையுடன் மடிக்கவும் கூடியது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Samsung அறிமுகப்படுத்தியுள்ள மடிக்கும் தொலைபேசி ஆஸ்திரேலிய சந்தையை எட்டும் அதேவேளையில் மோட்ரோலாவும் போட்டிக்கு இறங்கவுள்ளது.

Motorola Razr மடிந்திருக்கும்போது தொலைபேசியாக பயன்படுத்தவும் குறுந்தகவல்களை பார்வையிடவும் selfie-தற்படமெடுக்கவும் வசதிசெய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அதேநேரம், விரிக்கும்போது இன்னும் பல புதுமைகளை தன்னகத்தே கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Motorola Razr ஆஸ்திரேலியாவில் அறிமுகமாகும் திகதி பற்றிய சரியான அறிவிப்பு எதுவும் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியாகாதபோதும், அநேகமாக அடுத்த வருடம் சந்தையில் குதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now