ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு நட்சத்திர கழங்கங்களுக்கு இடையிலான Big Bash League கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கு வெளிநாட்டிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் வரவழைக்கப்பட்ட ஆப்கான் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Brisbane Heat அணிக்கு விளையாடுவதற்காக வந்த Mujeeb Ur Rahman என்ற 19 வயது சுழற்பந்துவீச்சாளர் ஹோட்டல் தனிமைப்படுத்தலில் தங்கியிருந்த காலப்பகுதியில் செய்யப்பட்ட சோதனையில் இவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இதனை அடுத்து Mujeeb Ur Rahman குயின்ஸ்லாந்து கோல்கோஸ்ட் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
Mujeeb Ur Rahman T20-I கிரிக்கெட் தர வரிசையில் உலகின் இரண்டாவது அதி சிறந்த பந்துவீச்சாளராவார்.
டஸ்மேனிய கிரிக்கெட் கழகத்துக்கு வாங்கப்பட்ட நேபாள நாட்டைசேர்ந்த பந்துவீச்சாளர் ஒருவருக்கு கடந்த வாரம் இதேபோன்று கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
