மெல்பேர்னில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா தொடர்பிலான கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
இன்றையதினம் மெல்பேர்ன் நகரின் Shrine of Remembrance பகுதியில் ஒன்றுகூடிய சுமார் 300க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், மாநில அரசால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கெதிராக குரலெழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பலர் முகக்கவசங்களை அணிந்துகொள்ளாத அதேநேரம் stage 4 கட்டுப்பாடுகளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் தாங்கியிருந்தனர்.
மெல்பேர்னில் நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகளின்கீழ் ஒன்றுகூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள பின்னணியில் இதனைமீறி பலர் அணிதிரண்டிருந்தனர்.
இதனையடுத்து குறித்த இடத்திலிருந்த பலர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதுடன் மேலும் பலருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்களில் பொலிஸ் அதிகாரி ஒருவரைத் தாக்கிய நபரும் அடங்குவதாக குறிப்பிடப்படுகிறது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
