பெர்த்தில் பிள்ளைகளை தன்னோடு காரில் வைத்து தீயிட்டு பலியான தமிழ்ப் பெண்?

தனது இரண்டு பிள்ளைகளையும் தாயொருவர் தன்னோடு காரில் வைத்து தீயிட்டுப் பலியானார் என்று கூறப்படும் அதிரவைக்கும் சம்பவமொன்று பெர்த்தில் இடம்பெற்றுள்ளது.

Flowers and a scorched car parking bay are seen at the scene of a fatal car fire in Coogee, Western Australia

Flowers and a scorched car parking bay are seen at the scene of a fatal car fire in Coogee, Western Australia, Tuesday, March 15, 2022. Source: RICHARD WAINWRIGHT/ AAP Image

இச்சம்பவத்திற்கு முதல்நாள் தனது உறவினர்களைச் சந்திப்பதற்காக அமெரிக்காவுக்குச் சென்ற குறிப்பிட்ட பெண்ணின் கணவர், இந்த அதிர்ச்சிதரும் சம்பவத்தையறிந்து தற்போது நாடு திரும்புவதாக  தெரிவிக்கப்படுகிறது.

கடந்த திங்கட்கிழமை மதியம், பெர்த் தெற்கே Coogee பகுதியில் கடற்கரைக்கு அருகேயுள்ள John Graham Reserve-இல் நிறுத்தப்பட்ட Honda Jazz கார் தீப்பிடித்து எரிந்திருந்ததுடன், காருக்குள்ளிருந்து 40 வயது பெண், 10 வயதுச் சிறுமி மற்றும் 8 வயதுச் சிறுவன் ஆகியோரது சடலங்கள் மீட்கப்பட்டன.

இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் பிள்ளைகளும் என தெரிவிக்கப்படும் அதேநேரம், இவர்கள் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என மேற்கு ஆஸ்திரேலியாவாழ் தமிழர்கள் சிலர் SBS தமிழிடம் தெரிவித்தனர்.

குறித்த கார் தீப்பிடித்துக்கொண்டமைக்கு வேறு நபர்கள் எவரும் காரணமாக இருந்திருக்க முடியாது எனத் தாம் நம்புவதாகவும், காருக்குள் இருந்தவர்களே தீப்பற்றவைத்திருக்க வேண்டுமெனவும் மேற்கு ஆஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து 'தற்கொலையுடன் நடைபெற்றுள்ள இரட்டைக்கொலை' என்ற கோணத்தில் இவ்விவகாரம் அணுகப்படுவதாக பொலிஸார் தரப்பில்  கூறப்படுகிறது.

குறித்த பெண் பெர்த் Fiona Stanley வைத்தியசாலையில் தாதியாகப் பணிபுரிந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஐந்து வருடங்களாக பெர்த் பகுதியில் வசிக்கும் இந்தக் குடும்பத்தினர் மிகவும் அன்பானவர்கள் என்றும், சம்பவம் இடம்பெறுவதற்கு முந்தைய வார விடுமுறையில்கூட தகப்பனும் பிள்ளைகளும் தங்களது வீட்டுத் தோட்டத்தில் மகிழ்ச்சியாகக் காணப்பட்டார்கள் என்றும் குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவர் கூறியுள்ளார்.

பொலீஸார் இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகிறார்கள்.

பெர்த்தில் கடந்த ஜனவரி மாதம் இலங்கைப் பின்னணிகொண்ட இந்திக குணதிலக என்பவர், தனது இரு பிள்ளைகளையும் கொன்று தானும் தற்கொலை செய்திருந்த நிலையில், தற்போது இதேபாணியில் இடம்பெற்ற மற்றுமொரு சம்பவமாக இது இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

Readers seeking crisis support can contact Lifeline on 13 11 14, 1800 Respect  on1800 737 732, Women's Crisis Line on 1800 811 811, Men's Referral Service on1300 766 491 and Kids Helpline on 1800 55 1800 (for young people aged up to 25). More information and support with mental health is available at Beyond Blue.org.au and on 1300 22 4636. 
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Share

Published

Updated


Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand