மெல்பேர்னில் வேகக்கட்டுப்பாட்டை மீறி வாகனமோட்டுபவர்களை கண்டுபிடிப்பதற்கென நிறுவப்பட்டுள்ள கமரா ஒன்றினூடாக நாளொன்று சுமார் 45 ஆயிரம் டொலர்கள் வரை அரசுக்கு வருமானம் கிடைப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மெல்பேர்ன் நகரில் corner of King & La Trobe Street-இல் அமைந்துள்ள கமராவிலேயே அதிக வாகன ஓட்டுநர்கள் அகப்படுகின்றனர்.
சுமார் 5 மாதங்களுக்கு முன்னர் நிறுவப்பட்ட இக்கமராவில் வேகக்கட்டுப்பாட்டை மீறி வாகனமோட்டிய சுமார் 9,500 ஓட்டுநர்கள் இதுவரை சிக்கியுள்ளனர்.
இதன்மூலம் நாளொன்றுக்கு 25 ஆயிரம் டொலர்கள் வருமானம் ஈட்டிய Warrigal & Batesford road, Chadstone-இல் உள்ள கமரா தற்போது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
