SKIP TO MAIN CONTENT

நீங்கள் casual பணியாளராக வேலை பார்ப்பவரா?

Casuals could be offered permanent jobs after 12 months under a Fair Work Commission proposal.
Source: AAP

1 min read

Published

Presented by Renuka.T


Skip to article content

நீங்கள் casual அடிப்படையில் கிரமமாக 12 மாதங்களுக்கு மேல் வேலை செய்திருந்தால், உங்களை நிரந்தர பணியாளராக்குமாறு நீங்கள் சார்ந்திருக்கும் நிறுவனத்திடம் கோரமுடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

Hospitality, retail, manufacturing, community services, child care ,farming உட்பட குறிப்பிட்ட சில துறைகளில் பணியாற்றுபவர்கள் தம்மை நிரந்தர முழுநேரம் அல்லது பகுதி நேர பணியாளராக்குமாறு கோர முடியுமென Fair Work Commission-இன் முன்மொழிவு தெரிவிக்கின்றது.

இதனடிப்படையில் casual பணியாளர்கள் நிச்சயம் நிரந்தரமாக்கப்படுவார்கள் என்பதற்கான உத்தரவாதம் இல்லாவிட்டாலும், அவ்வாறு கேட்பதற்கான உரிமை அவர்களுக்கு வழங்கப்படுவதே தமக்குக் கிடைத்த முதல் வெற்றி என Australian Council of Trade Unions-ACTU தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 40 வீதமான பணியாளர்கள் குறைந்த ஊதியம் மற்றும் superannuation-க்கு பணி புரிவதாகவும் பல முதலாளிகள் என்ற பதத்தைப் பயன்படுத்தி தொழிலாளர்களை சுரண்டுவதாகவும் தெரிவித்துள்ள ACTU, இந்நிலை மாற்றப்பட வேண்டியது அவசியமென சுட்டிக்காட்டியுள்ளது.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now