துணையைத் தேடுவதற்கான dating app ஊடாக திருட்டு சம்பவங்களும் இடம்பெறுவதால், இதைப் பயன்படுத்துபவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
நேற்றுமுன்தினம் இரவு 23 வயது இளைஞர் ஒருவர், dating app ஊடாக அறிமுகமான பெண்ணைச் சந்திப்பதற்காக, சிட்னியின் North Bondi பகுதிக்குச் சென்றிருக்கிறார்.
அங்கே அழகான பெண்ணுக்குப் பதிலாக 3 இளைஞர்களை எதிர்கொண்டவரின் பணப்பர்ஸ் திருடப்பட்டதுடன் தாக்குதலுக்குமுள்ளாகியிருக்கிறார்.
இது தொடர்பில் குறித்த இளைஞர் காவல்துறையில் முறையிட்டதைத் தொடர்ந்து, இச்சம்பவத்துடன் தொடர்புடைய 18 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை dating app ஊடாக திருடர்களும் நம்முடன் உறவாடலாம் என்பதால், நமது விபரங்களைப் பகிர்ந்துகொள்வதிலோ, தெரியாதவர்களைச் சந்திக்கச் செல்வதிலோ அவதானமாக இருக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
