நீங்கள் வெளிநாடு சென்றுவிட்டு நாடு திரும்பும்போது duty free கடைகளில் சிகரெட் பாக்கெட்டுகள் அல்லது புகையிலை வாங்கி வருபவரா? அப்படியென்றால் இது உங்களுக்கான செய்தி.
இதுவரை காலமும் ஆஸ்திரேலியாவுக்குள் நுழையும் பயணி ஒருவர் 50 கிராம் tobacco பொருட்களை வரி செலுத்தாமல் கொண்டுவரலாம். ஆனால் நேற்று (ஜுலை 1) முதல் இந்த அளவு 25 கிராமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி பயணி ஒருவர் 25 கிராம் சிகரெட் பாக்கெட் அல்லது புகையிலை துகள்களுடன்(loose leaf) ஒரேயொரு திறந்த சிகரெட் பாக்கெட் மட்டுமே கொண்டுவர முடியும்.
இதற்கு மேலதிகமாக கொண்டு வருபவர்கள் விமான நிலையத்தில் வைத்து வரி செலுத்தவேண்டியிருக்கும். இல்லையென்றால் மேலதிகமாக கொண்டுவந்தவற்றை குப்பையில் போடவேண்டியிருக்கும்.
2016ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட சுகாதார மேம்பாட்டு செயற்றிட்டங்களின் அடிப்படையில் இம்மாற்றம் அமுல்படுத்தப்படுகின்றது.
வர்த்தக ரீதியாக tobacco பொருட்களை இறக்குமதி செய்பவர்களை இம்மாற்றம் பாதிக்காது.
