ஆஸ்திரேலியாவில் போக்குவரத்திற்கு அதிக பணம் செலவாகும் மாநிலங்களில் நியூ சவுத் வேல்ஸ் முதலிடத்தில் உள்ளதாக The Australian Automobile Association (AAA)இன் அறிக்கை சொல்கிறது.
இதன்படி சிட்னி வாழ் குடும்பம் ஒன்று வாரத்திற்கு 420 டொலர்களை போக்குவரத்திற்காக மட்டும் செலழிக்கின்றது. இது அக்குடும்பம் ஈட்டும் வருமானத்தின் 13 வீதமாக காணப்படுகின்ற அதேநேரம் வருடமொன்றுக்கு 22 ஆயிரம் டொலர்கள் போக்குவரத்திற்கு மட்டும் செலவாகின்றது.
இதேவேளை ஏனைய மாநிலங்களில் வாழ்பவர்கள் எவ்வளவு செலழிக்கிறார்கள் என்ற விபரம் கீழே தரப்பட்டுள்ளது.
Melbourne $348.49
Brisbane $375.64
Perth $300.99
Adelaide $285.66
Hobart $271.17
Darwin $286.28
Canberra $299.61
National ave. $323.36
