தினமும் இரு மணிநேரங்களுக்கு மேல் கார் ஓட்டும் நடுத்தர வயது நபர்களது மூளையின் செயற்றிறன் விரைவாக குறைவடைகின்றது என புதிய ஆய்வு முடிவு ஒன்று சொல்கிறது.
இதன்காரணமாக ஒருவரது புத்திக்கூர்மை மழுங்கக்கூடிய வாய்ப்பு உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
லண்டனிலுள்ள Leicester பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
37 வயது முதல் 73 வயதுக்கு இடைப்பட்ட 5 லட்சம் பேரிடம் 5 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை அடிப்படையாக வைத்து இம்முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த 5 லட்சம் பேரில் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் வாகனம் ஓட்டும் 93,000 பேரின் மூளையின் செயற்றிறன் ஒப்பீட்டளவில் குறைந்து காணப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நீண்டநேரம் வாகனம் ஓட்டுவது சோர்வையும் மனஅழுத்தத்தையும் ஏற்படுத்துவதே இதற்குக் காரணம் என குறிப்பிடப்படுகின்றது.
