மெல்பேர்ன், Springvale-இலுள்ள வங்கிக்கு தீ வைத்து பலர் காயமடையக் காரணமாக இருந்தார் என குற்றம்சாட்டப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர் இது குறித்த வழக்கை எதிர்கொள்கிறார்.
கடந்த வருடம் நவம்பர் 18ம் திகதி Springvale Commonwealth வங்கிக்குச் சென்ற Nur Islam என்ற மியன்மார் நாட்டைச் சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர், வங்கியில் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டதால் ஆத்திரமடைந்து அவ்வங்கிக்கு தீ மூட்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் பன்னிரண்டுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததுடன் வங்கிக்கு சுமார் 3 மில்லியன் டொலர் பெறுமதியான சேதம் ஏற்பட்டிருந்தது.
இதையடுத்து குறித்த நபர் மீது 108 பிரிவுகளில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தநிலையில் அது குறித்த விசாரணைகள் தற்போது நடைபெறுகின்றன.
