நீரினடியில் சென்று நீரினங்களை கண்டு களிக்கும் நீச்சலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வெளிநாட்டு மாணவர் ஒருவர் நியூ சவுத் வேல்ஸ் Lake Conjola-வில் மூழ்கி இறந்துள்ளார். நியூ சவுத் வேல்ஸ் மாநில Lake Conjola பகுதியில் கிறிஸ்மஸ் தினத்தன்று இடம்பெற்ற சம்பவத்திலேயே குறிப்பிட்ட மாணவர் உயிரிழந்துள்ளார்.
தென்கொரியாவிலிருந்து மாணவர் விஸாவில் ஆஸ்திரேலியாவுக்கு வந்து தங்கியிருந்து கல்வி கற்ற 46 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்றும் கிறிஸ்மஸ் தினத்தன்று உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து நீச்சலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற உடனேயே அவசர உதவிக்க அழைப்பு மேற்கொள்ளப்பட்டு பிற்பகல் 2.40 மணியளவில் சம்பவ இடத்துக்கு விரைந்த அவசர சேவையாளர்கள் நீரில் மூழ்கிய மாணவனை மீட்டெடுத்தபோதும் அவசர சிகிச்சையெதுவும் பலனிக்காத நிலையில் அவர் உயிரிழந்துவிட்டார்.
Share
