Census இணையத்தளம் Hackers எனப்படும் இணையத்திருடர்களால் தாக்குதலுக்குள்ளானதாலேயே அதன் சேவைகள் முடக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய புள்ளிவிவர திணைக்களம் Australian Bureau of Statistics திணைக்களம் அறிவித்துள்ளது. வெளிநாட்டு hacker களாலேயே இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் எனினும் யாருடைய தகவல்களும் திருடப்படவில்லை என்றும் ABS தெரிவித்துள்ளது.
Census இணையத்தளம் நேற்று இரவு செயலிழப்பதற்கு முன்பாக சுமார் இருபது லட்சம் பேர் தமது விபரங்களைப் மக்கள்தொகை கணக்கெடுப்பில் கலந்துகொண்டு இணையம் வழி தங்களின் படிவங்களை பூர்த்தி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. Census இணையத்தளத்தின் மீது Hackers எனப்படும் இணையத்திருடர்கள் நடத்தியிருக்கும் தாக்குதலானது மிகவும் தீங்கிழைக்கும் ஒன்றென்று தமக்குத் மிகத் தெளிவாகத் தெரிந்ததாலேயே தாம் இம்முடிவுக்கு வந்ததாகத் தலைமைப் பிள்ளிவிவரவியலாளர் David Kalisch, ABC வானொலிக்குத் தெரிவித்தார். ஆஸ்திரேலிய புள்ளிவிவர திணைக்களம் - ABS ஆனது Australian Signals Directorate உடன் இணைந்து இத் தாக்குதலுக்கான மூலகாரணிகள் பற்றி ஆராய்ந்து வருகின்றது.
இதேவேளை Census இணையத்தளம் தாக்குதலுக்கு உட்படவில்லை என்றும் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் Malcolm Turnbull தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே Census இணையம் நிறுத்தி வைக்கப்பட்டதாக பிரதமர் Turnbul கூறினார். The Australian Bureau of Statistics இன் இந்த நடவடிக்கையைப் பிரதமர் வரவேற்றுள்ளார்.
Census – ஆஸ்திரேலிய மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தும் Australian Bureau of Statisticsயின் இணையதளம் செயலிழந்து போனதையடுத்து நேற்று Census – மக்கள் தொகை கணக்கெடுப்பில் கலந்துகொள்ளாதவர்கள் Penalty – தண்டப்பணம் செலுத்த தேவையில்லை என்று அரசு அறிவித்துள்ளது.
எனவே இணயதளம் செயலிழந்த காரணத்தினால் மக்கள்தொகை கணக்கெடுப்பு படிவத்தை இணையதள வழி நிரப்பாதவர்கள் $180 தண்டபணம் செலுத்தவேண்டி வருமோ என்று அஞ்சத் தேவையில்லை. செப்டம்பர் 23 ஆம் தேதிக்குமுன் இந்த கணக்கெடுப்பில் கலந்துகொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
