SKIP TO MAIN CONTENT

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார் Turnbull!

Scott Morrison
Prime Minister Scott Morrison (r) says former PM Malcolm Turnbull will be one of Australia's best. (AAP) Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் Malcolm Turnbull ஏற்கனவே அறிவித்ததற்கிணங்க இன்று தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

Turnbull அவர்கள் அடுத்த தேர்தலுக்கு முன்பாக பதவிவிலகுவது வருத்தமளித்தாலும், சிறந்த ஒரு முன்னாள் பிரதமராக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார் என பிரதமர் Scott Morrison தெரிவித்துள்ளார்.

பெரும் பரபரப்புக்கு மத்தியில் நடைபெற்று முடிந்த தலைமைத்துவ சவாலையடுத்து பிரதமர் பதவியிலிருந்து விலக்கப்பட்ட Malcolm Turnbull அவர்கள் தாம் நாடாளுமன்றிலிருந்து ஓவ்வுபெறுவதாக அறிவித்திருந்தார்.அந்த அடிப்படையில் இன்றையதினம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அவர் இராஜினாமா செய்தார்.

கடந்த 2004ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட Malcolm Turnbull தனது பதவிவிலகலை சபாநாயகர்  Tony Smith-க்கு இன்று கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

இதையடுத்து இவரது சிட்னி Wentworth தொகுதி ஆசனத்திற்கான இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now