SKIP TO MAIN CONTENT

நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள முதல் பூர்வீகப் பெண்மணி

ஆஸ்திரேலிய அரசியல் வரலாற்றில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள முதல் பூர்வீகப் பெண்மணி Linda Burney

Linda Burney

1 min read

Published

Updated


Skip to article content

இந்தத் தேர்தல் கடுமையான போட்டியுடையதாக இருந்தாலும், Linda Burney போன்ற சிலர் வெற்றி பெறுகிறார்கள் என்று வாக்குகளை எண்ண ஆரம்பித்த சில நேரத்திலேயே தெரிந்து விட்டது.  ஆஸ்திரேலிய அரசியல் வரலாற்றில் Linda Burney, நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள முதல் பூர்வீகப் பெண்மணி என்ற பெருமை தனது என்பதை சுமார் ஏழரை மணிக்கே தெரிந்து கொண்டார்.

NSW மாநிலத்தின் தெற்கு சிட்னி தொகுதியில் Labor கட்சி சார்பாக Linda Burney போட்டியிட்டார்.  இந்தத் தொகுதி marginal seat எனப்படும் கடுமையான போட்டியை வழமையாக எதிர்பார்க்கும் ஒரு தொகுதி.  2013 தேர்தலில் அப்போதிருந்த Labor கட்சி நாடாளுமன்ற உறுப்பினரை Nickolas Varvaris என்ற Liberal கட்சி வேட்பாளர்f தோற்கடித்தார்.  ஆனால், அவரோ இந்தத் தேர்தலில் மிக விரைவிலேயே, தான் Linda Burneyயிடம் தோற்றுவிட்டதை ஒத்துக் கொண்டார்.

தான் "தேர்தலில் வெற்றி பெற்றால், தனது மக்களுக்காக நிச்சயம் குரல் கொடுப்பேன்" என்றும், "எனது பூர்வீக அடையாளம் அதற்கான வழி சமைத்துத் தரும்" என்று அண்மையில் NITV தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் Linda Burney குறிப்பிட்டிருந்தார்.

அனைத்து விடயங்களிலும் எல்லா பூர்வீக மக்களும் ஒரே கருத்தைக் கொண்டிருக்காவிட்டாலும், தான் தெரிவு செய்யப்பட்டால், Your Child, Our Future என்ற கொள்கைளை நடைமுறைப்படுத்த களத்தில் இறங்கிவிடுவதாக அவர் மேலும் கூறியிருந்தார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now