SKIP TO MAIN CONTENT

நிதிநிலை அறிக்கை 2018: முதியவர்களுக்கு எவ்வாறு அமைந்துள்ளது?

聯邦政府將向維州偏遠地區的護老院分發一百萬個口罩。
聯邦政府將向維州偏遠地區的護老院分發一百萬個口罩。 Source: Getty Images

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

இன்று வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கையின் மற்றுமொரு வெற்றியாளர்களாக வயது முதிர்ந்த ஆஸ்திரேலியர்கள் காணப்படுகின்றனர்.

அடுத்த 4 ஆண்டுகளில் மேலதிகமாக 14 ஆயிரம் home care support packages உருவாக்கப்படுகிறது. இதற்கென 1.6 பில்லியன் டொலர்கள் செலவிடப்படவுள்ளது.

இதுதவிர regional பகுதிகளில் வாழ்பவர்களுக்கு வழங்கப்படும் aged care சேவைகளை மேம்படுத்தவென 146 மில்லியன் டொலர்கள் செலவிடப்படவுள்ளது.

அத்துடன் மனச்சோர்வு மற்றும் தனிமையைப் போக்குவதற்காக அரசு 83 மில்லியன் டொலர் செலவில் நடைமுறைப்படுத்தப்படும் செயற்றிட்டங்களிலிருந்து முதியோர் இல்லங்களில் வாழ்பவர்கள் பயனடைய முடியும்.

ஓய்வூதியம் பெறும் முதியவர்கள் அனைவரும் இனி Pension Loans Scheme-க்குத் தகுதிபெறுவர். இதன்மூலம் தம்பதியர்கள் தமது ஓய்வூதிய வருமானத்தை 17,800 டொலர்களால் அதிகரிக்க முடியும். இவ்வாறு வருமானம் அதிகரிப்பதால் அவர்கள் சாதாரணமாகப் பெறும் ஓய்வூதியத்தொகை பாதிக்கப்படாது.

அதேபோன்று ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆண்டொன்றுக்கு மேலதிகமாக 1300 டொலர்கள் வரை உழைக்க முடியும் எனவும் இதனால் அவர்கள் சாதாரணமாகப் பெறும் ஓய்வூதியத்தொகை பாதிக்கப்படாது எனவும் குறிப்பிடப்படுகிறது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now