ஆஸ்திரேலிய வரித்திணைக்களம் வெளியிட்டுள்ள 2016-17ம் ஆண்டு தரவுகளின் அடிப்படையில் நாட்டின் செல்வந்தர்கள் மற்றும் ஏழைகள் வாழும் பிரதேசங்கள் எவை என்ற விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
2016-17 காலப்பகுதியில் வரித்திணைக்களத்திற்கு வரி செலுத்திய 13.9 மில்லியன் ஆஸ்திரேலியர்களின் தரவுகளின் அடிப்படையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி ஆஸ்திரேலியாவின் செல்வந்தர்கள் சிட்னியில் வடக்குக் கரையோரங்களிலேயே அதிகம் வாழ்வதாகவும் ஏழ்மை நிலையிலுள்ளவர்களைவிடவும் இவர்கள் 10 மடங்கு அதிக வருமானம் ஈட்டுவதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
NSW 2108 (Coasters Retreat, Currawong Beach, Palm Beach) பகுதியே ஆஸ்திரேலியாவின் செல்வந்த பிரதேசமாக முதலிடம் வகிக்கின்றது.
அதேநேரம் நாட்டின் செல்வந்தர்கள் அதிகம் வாழும் முதல் 10 பிரதேசங்களில் எட்டு பிரதேசங்கள் சிட்னியையொட்டி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது குறித்த விபரம் கீழே தரப்பட்டுள்ளது.

இதேவேளை ஆஸ்திரேலியாவில் குறைந்த வருமானமீட்டுபவர்கள் வாழும் முதல் 10 பிரதேசங்கள் குறித்த தகவல் கீழே தரப்பட்டுள்ளது.

