SKIP TO MAIN CONTENT

நாடு திரும்பிய அடுத்த நாளே பொலீஸில் சரணடைந்தார் Renae Lawrence!

Bali Nine drug smuggler Renae Lawrence was pursued by reporters at Brisbane airport.
Bali Nine drug smuggler Renae Lawrence was pursued by reporters at Brisbane airport. Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

பாலி - 9 எனப்படும் போதைப்போருள் கடத்தல் கும்பலில் ஒருவராக கைது செய்யப்பட்டு 13 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்துவிட்டு நாடு திரும்பிய Renae Lawrence நேற்று பிற்பகல் Waratah பொலிஸ் நிலையத்துக்கு சென்று சரணடைந்தார்.

2005 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் திகதி சிட்னியில் கார் ஒன்றைத்திருடிக்கொண்டு சாரதிபத்திரம் இல்லாமல் பாலி 9 கும்பலின் இன்னொரு நபரான Matthew Norman-உடன் பொலீஸ் துரத்தியபோது தப்பியோடினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இருவருக்கும் எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் பொலீஸிடம் சரணடைந்த Renae Lawrence தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் டிசெம்பர் 6 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்திரவிடப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவில் போதைப்பொருளுடன் கைதானார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 13 வருட சிறைத்தண்டனையை நிறைவு செய்துகொண்டு Renae Lawrence நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை ஆஸ்திரேலியாவுக்கு வந்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now