SKIP TO MAIN CONTENT

நியூசிலாந்தில் வெளிநாட்டு பணியாளர்களுக்கான தற்காலிக வேலை விசாவில் முக்கிய மாற்றம்!

PIXABAY
Source: Pixabay

1 min read

Published

Updated

Source: SBS Punjabi


Skip to article content

நியூசிலாந்து அரசு வெளிநாட்டு பணியாளர்களுக்கான temporary work visa-தற்காலிக வேலை விசா வழங்கும் நடைமுறையில் முக்கிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.

இதன்படி வேலைவழங்குநர்களும் விண்ணப்பதாரிகளும் இலகுவாக விண்ணப்பிக்கும்வகையில் employer-led visa framework  அறிமுகப்படுத்தப்படுகின்றது.

ஏற்கனவே உள்ள 6 விசா பிரிவுகளுக்குப் பதிலாக நடைமுறைப்படுத்தப்படும் இப்புதிய மாற்றத்தின் கீழ்- வேலை வழங்குநர், பணியாளர் மற்றும் பணி குறித்த பரிசோதனைகளை மேற்கொள்வது இலகுவாக்கப்படுகின்றது.

அத்துடன் இத்தற்காலிக விசாவுக்கான வருடாந்த ஊதிய வரம்பும் அதிகரிக்கப்படுகிறது.

இப்புதிய மாற்றத்தின் மூலம் நியூசிலாந்திலுள்ள சுமார் முப்பதாயிரம் வர்த்தக நிறுவனங்கள் தமக்கான பணியாளர்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியுமென அந்நாட்டு குடிவரவு அமைச்சர் Iain Lees-Galloway தெரிவித்தார்.

அதேநேரம் 2020 முதல் அறிமுகப்படுத்தப்படும் மற்றுமொரு மாற்றத்தின் கீழ் நியூசிலாந்திலுள்ள lower-paid-குறைந்த சம்பளம் பெறும் பணியாளர்களும் தமது குடும்பத்தை நியூசிலாந்துக்கு வரவழைத்துக்கொள்வதற்கு வழிவகை செய்யப்படுகின்றது.

இதன்மூலம் வெளிநாடுகளிலிருந்து பணிபுரிவதற்காக வருபவர்கள் நிரந்தரமாக நியூசிலாந்திலேயே தங்குவதற்கான வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் குறித்த விசாவானது வேலைவழங்குநரின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் ஒன்று எனவும் இதனை general skilled work விசாவுடன் சேர்த்து எவரும் குழப்பிக்கொள்ளக்கூடாது எனவும் குடிவரவு முகவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now