SKIP TO MAIN CONTENT

நியூ சிலாந்து நாட்டில் குடியேற விண்ணப்பிக்கும் தொழில்களில் விபச்சாரம்/பாலியல் தொழில் அங்கீகரிக்கப்படுகிறது!

நியூ சிலாந்து நாட்டில் குடியேற விண்ணப்பிக்கும் தொழில்களில் விபச்சாரம்/பாலியல் தொழில் அங்கீகரிக்கப்படுகிறது!

Sex Workers
Source: Getty

1 min read

Published

By Raymond Selvaraj


Skip to article content

வெளிநாடுகளில் வாழ்கின்றவர்கள் அல்லது நியூ சிலாந்து நாட்டில் Work Visa வைத்துக்கொண்டு வேலை செய்யும் வெளிநாட்டவர் நியூசிலாந்து நாட்டில் நிரந்தரமாக குடியேற விண்ணப்பிக்கும்பொது ஒருவரின் தகுதி, திறமை அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படுகின்றன. அதற்காக அரசு பல தொழில்களை அங்கீகரித்துள்ளது.  

அப்படி அரசு அங்கீகரித்திருக்கும் தொழில்களில் skilled sex workers மற்றும் escorts எனும் பாலியல் உறவை தொழிலாகச் செய்யும் பிரிவினரும் விண்ணப்பிக்கலாம் என்று information on Immigration NZ's (INZ) website கூறுகிறது.    

குடியேறும் தகுதி கொண்ட தொழில்கள் எவை என்பதை முடிவு செய்யும் Australian and New Zealand Standard Classification of Occupations (ANZSCO) அமைப்பு இந்த முடிவை எடுத்துள்ளது. Australian and New Zealand Standard Classification of Occupations (ANZSCO) அமைப்பின் முடிவை அரசு செயல்படுத்தும் என்பதால் பாலியல் தொழிலும் தற்போது குடியேறும் தகுதி பெறும் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.

குடியேறும் தகுதி பெரும் புள்ளிகளில், பாலியல் தொடர்பான தொழிலில் ஒருவர் கல்வி தகுதி பெற்றிருக்கவேண்டும் அல்லது மூன்று ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டவராக இருக்கவேண்டும் என்றும் அவரின் ஆண்டு வருமானம் நியூ சிலாந்து டாலர் $75,795 இருக்கவேண்டும் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now