மனுஸ் மற்றும் நவுறு தீவுகளிலிருந்து மருத்துவ காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்பட்ட அகதிகளில் அரைவாசிப்பேருக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் அவர்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து தமது வதிவிட உரிமைக்காக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே தமக்கு நோயிருப்பதுபோன்று நடித்து இங்கு வந்துள்ளார்கள் என்றும் அரச வட்டாரங்களை மேற்கோள் காண்பித்து The Daily Telegraph ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மனுஸ் மற்றும் நவுறு தீவுகளிலிருந்து மருத்துவ காரணங்களை காண்பித்து இதுவரை சுமார் 900 அகதிகள் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்கள் என்றும் அவர்கள் ஆஸ்திரேலியாவின் சட்டங்களிலுள்ள ஓட்டைகளை பயன்படுத்தி மீண்டும் மனுஸ் - நவுறு தீவுகளுக்கு போகாமல் ஆஸ்திரேலியாவிலேயே உள்ளார்கள் என்றும் இந்த செய்தி மேலும் தெரிவித்துள்ளது.
இவ்வாறு ஆஸ்திரேலியாவுக்கு வந்தவர்களில் அநேகமானர்கள் சமூகத்தில் வாழ்கிறார்கள் என்றும் இன்னும் பலர் தங்கள் அடையாளத்தை காண்பிக்க விரும்பாமல் தடுப்பு முகாம்களிலேயே உள்ளார்கள் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.
மருத்துவ காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்பட்ட அகதிகளின் வழக்குகளை தனித்தனியாக விசாரிப்பதற்கு பிரதமர் Scott Morrison-க்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருப்பதையடுத்து, சுயாதீன விசாரணைக்குழு ஒன்று வரும் வாரங்களில் அமைக்கப்படவுள்ளதாகவும் அந்த ஊடகம் மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.
