பூர்வீக குடிகளான Gumatj மக்களுக்கு பாரம்பரியமாக சொந்தமான Nhulunbuy-க்கு அருகேயிருக்கும் Dhupuma Plateau என்ற இடத்திலுள்ள Arnhem Space Centre எனும் மையத்திலிருந்து இந்த ராக்கெட்டுகள் விண்வெளிக்கு ஏவப்படவிருக்கின்றன. இந்த நிலப்பகுதியின் பாரம்பரிய உரிமையாளர்களாகிய பூர்வீக குடிகளிடமிருந்து இதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாக பிரதமர் Anthony Albanese மற்றும் வடபிராந்திய தலைமை அமைச்சர் Natasha Fyles ஆகியோர் அறிவித்திருக்கிறார்கள். ராக்கெட்டுக்கள் விண்வெளிக்கு அனுப்பப் பட்ட பின்னர் இப்பகுதியில் எஞ்சியிருக்கக் கூடிய தளபாடங்கள் மற்றும் உபகரணங்கள் என்பன முற்றாக அகற்றப்பட்டு மீண்டும் முன்பிருந்த நிலையில் பூர்வீக குடிகளிடம் கையளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
NASA நிறுவனம் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக ஆஸ்திரேலியாவிலிருந்து ராக்கெட்களை விண்ணுக்கு ஏவ திட்டமிட்டுள்ளது. NASA நிறுவனம் 1995 ஆம் ஆண்டு தெற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள Royal Australian Air Force Woomera Range complex யிலிருந்து ராக்கெட் ஒன்றை விண்ணுக்கு ஏவியது. இப்போது தனியார் நிறுவனமான Equatorial Launch Australia என்ற நிறுவனத்தின் உதவியுடன் 3 ராக்கெட்டுக்களை ஏவ திட்டமிட்டுள்ளது. இதற்கென NASA அதிகாரிகள் 75 பேர் இங்கு வரவிருக்கிறார்கள்.

முதலாவது ராக்கெட் இம்மாதம் 26 ஆம் தேதி ஏவப்படவிருக்கிறது. அதற்கு அடுத்த இரண்டு வாரங்களில் மற்ற இரண்டு ராக்கெட்களும் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டுகள் ஒவ்வொன்றும் 13 மீட்டர் நீளமானவையென்றும் barge என்ற இழுவை ப் படகுகள் மூலம் இவை ஏவுதளத்திற்கு அதாவது launch pad க்குக் கொண்டுவரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ராக்கெட்டுகள் என்ன நோக்கத்திற்காக விண்வெளிக்கு அனுப்பப் படுகின்றன என்ற கேள்வி பிறக்கலாம். Space phenomena என்ற விண்வெளி நிகழ்வுகளுள் சிலவற்றை Southern Hemisphere என்ற தென்கோளத்திலிருந்து மட்டுமே அவதானிக்கமுடியும். ஆகவே இதற்கு ஆஸ்திரேலியாவின் வடபிராந்தியப்பகுதி முற்றிலும் பொருத்தமாக இருக்கும் என்பதே விஞ்ஞானிகளின் கருத்தாகும். இந்த ராக்கெட்டுக்கள் heliophysics, astrophysics மற்றும் planetary Science phenomena தொடர்பான ஆய்வுகளைச் செய்யும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.
அமெரிக்கா ஆஸ்திரேலியாவிலிருந்து ராக்கெட்டுகளை அனுப்புவது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் Anthony Albanese இந்த திட்டம் தனக்கு உண்மையில் மகிழ்ச்சியளிப்பதாகவும் இந்த திட்டத்தின்மூலமாகப் பெறப்படும் தரவுகள் பல்கலைக்கழகங்களின் விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கு பேருதவியாகவிருக்குமென்றும் தெரிவித்திருக்கிறார்.

தென்கோளப்பகுதியிலுள்ள காலநிலையைக் கருத்திற்கொண்டே ராக்கெட்டை அனுப்புவதற்காக இப்பகுதி தெரிவு செய்யப்பட்டது என்றும் விண்வெளியில் 250 கி.மீ உயரம் செல்லும் இந்த ராக்கெட்டுகள் சூரியனுக்கும் பூமிக்கு மிடையே நிலவும் பௌதிக காரணிகள் தொடர்பான தரவுகளைச் சேகரிக்கும் என்றும் ELA- Equatorial Launch Australia நிறுவனத்தின் Site operator, Russel Shaw தெரிவித்தார்.
வேறு கிரகங்களிலிருந்தும் சூரியனிலிருந்தும் solar குடும்பத்துக்கு சமீபமாக வரும் transmissions என்ற சமிக்ஞைகளை க்கண்டறிவது இதன் பிரதான நோக்கமாகும். இந்தத் திட்டத்தின் மூலமாக Arnhem Space centre ஆஸ்திரேலியாவின் பிரதான launch capabilities -ராக்கெட் அனுப்ப வல்ல பிரதான தளமாக மாறும் வாய்ப்பு உருவாகும் என்றும் அடுத்த சில வருடங்களில் ஆஸ்திரேலியாவிலிருந்து விண்வெளிக்குச் செல்லும் சாத்தியம் நிஜமானது என்பதும் சாத்தியமானது என்பதும் உறுதியாகும் என்றும் அவர் தெரிவித்தார். அடுத்த சிலவருடங்களில் வருடாந்தம் 50 இற்கும் அதிகமான ராக்கெட்டுகள் Arnhem Space Centre இலிருந்து புறப்படும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வட பிராந்தியத்தில் இந்த குறிப்பிட்ட இடம் தெரிவுசெய்யப்பட்தற்கும் முக்கிய காரணமுள்ளது. Arnhem Space centre பூமத்தியரேகையிலிருந்து 12 பாகை தெற்கில் gulf of carpentaria பகுதியிலுள்ளது. உலகில் வர்த்தக ரீதியில் செயல்படும் multiuser equatorial launch site உலகத்திலேயே இது ஒன்றுதான். இது அமைந்துள்ள புவியியல் கேந்திர நிலையமும் பூமத்தியரேகைக்கு இது மிக அருகிலுள்ள காரணத்தினாலும் இங்குள்ள வசதிகள் காரணமாகவும் உலகிலுள்ள ராக்கெட் தயாரிப்பு நிலையங்களுக்கும் விண்ணுக்கு ராக்கட்களை அனுப்பும் நிறுவனங்களுக்கும் attractive - விருப்பத்திற்குரிய நிலையமாக இது இருக்கிறது என்று ELA வின் தலைவர் Michael Jones கூறியிருக்கிறார். விண்வெளியின் எந்தப் பகுதிக்கும் ராக்கெட்டுகளையும் செய்மதிகளையும் மிகக்குறைந்த செலவில் அனுப்பக்கூடிய நிலையமாக இது இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
Australian Space Agency இன் தலைவர் Enrico Palermo கருத்து தெரிவிக்கும்போது சர்வதேசரீதியாக விண்வெளியில் ஆராய்ச்சிகளைச் செய்வோருக்கு ஆஸ்திரேலியாவுடன் இணைந்து இதைச்செய்யலாம் என்ற நம்பிக்கை இந்த திட்டத்தின் மூலமாக ஏற்படும் என்று தெரிவித்தார். இதன் அடிப்படையில் புதிய வர்த்தக வாய்ப்புகளும் வேலைவாய்ப்புகளும் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
