SKIP TO MAIN CONTENT

"அகதியாக அமெரிக்காவில் குடியமர மகளை துறக்க வேண்டும்"

Iranian refugee
Source: Supplied

1 min read

Published

Updated

By Selvi



Skip to article content

அமெரிக்காவில் குடியமர்த்தப்பட வேண்டும் எனில் தனது குடும்பத்தை துறக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டதாக, நவ்ரூவில் வசிக்கும் ஈரானிய அகதி Arash Shirmohamadi தெரிவித்துள்ளார்.  ஆனால் இதனை குடிவரவு மற்றும் எல்லை பாதுகாப்பு திணைக்களம் மறுத்துள்ளது.

Shirmohamadiவின் மனைவி கர்ப்பமாக இருந்த போது மருத்துவ சிகிச்சைக்காக நவ்ரூவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அவரின் மகள் ஒன்பது மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் பிறந்ததுள்ளார்.  அப்பொழுது முதல் தாயும் மகளும் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகின்றனர்.

ஈரானியரான Shirmohamadiவை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளுமா என்பது கேள்விக்குறியாக உள்ள அதேவேளை  Shirmohamadiவின் குடும்பம் ஆஸ்திரேலியாவில் உள்ள காரணத்தால், அமெரிக்காவில் குடியமர்த்தப்படுவதற்கான விண்ணப்பத்தை இவர்கள் தனித்தனியாக தான் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், ஒன்றாக சமர்ப்பிக்க விரும்பினால்  Shirmohamadiவின் மனைவி மற்றும் மகள் நவ்ரூவிற்கு திரும்ப வேண்டும் எனவும் திணைக்களம் கூறியுள்ளது.  ஆனால் தனது மனைவிக்கு நவ்ரூவில் பாதுகாப்பு இல்லை என Shirmohamadi கூறுகிறார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now